தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின்

தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் தனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்த ரஞ்சித் பண்டார, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தனது சிறப்புரிமைகளை மீறியதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி