முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை  இராணுவத்திடமிருந்து விடுவிக்க கோரி இன்று (11)

போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இராணுவத்தினரால்  பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பதாகையில், “இராணுவத்துக்குரிய பிரதேசம்; உட்செல்ல தடை” என எழுதப்பட்டுள்ளது

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழ் மக்களின் உரிமைப் போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் பாரிய பிரதேசத்தை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கு இடவசதி இன்றியும் தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த பகுதியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி இன்று (11) அமைதி வழிப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது

முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தின்14 SLNG படைப்பிரிவு இராணுவத்தை வெளியேறுமாறு கோரியே குறித்த போராட்டம்  நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் இன்று 11ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இதில் அனைவரையும் அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல தடவைகள் அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயன்கிட்டவில்லை எனவும் இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குறித்த பதாகை இராணுவத்தினால் வைக்கப்பட்டுள்ளதோடு அதிகளவான இராணுவத்தின் குவிக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி