யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகம் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி