'அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் வந்தால் அவரை வரவேற்பதற்கு தயார். அவர் எமது பக்கம்

வருவதை நானும் விரும்புகின்றேன்' என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 'ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உட்பட அதிகாரிகளை நீக்குதல்' எனும் தலைப்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியன ஒன்றிணைந்து கொண்டு வந்த பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

'ரொஷான் ரணசிங்க பணத்துக்கு அடிபணியும் நபர் கிடையாது. அவர் கள்ளன் அல்லன் என்பது எனக்குத் தெரியும். அவர் போன்றவர்கள்தான் எமக்குத் தேவை.' - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி