செவ்விளநீர் ஏற்றுமதி 2023 ஆம் ஆண்டில் 117% வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையாக அன்றி உற்பத்தி

செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

செவ்விளநீர் உற்பத்தியாக மேலும் நாட்டில் முன்னேற்றமின்றிக் காணப்படுவதாகவும், மண் பரிசோதனையை மேற்கொண்டு செவ்விளநீர் செய்கைக்குப் பொருத்தமான பிரதேசத்தை அடையாளம் கண்டு அப்பிரதேசத்தில் செவ்விளநீர் உற்பத்தி ஏற்றுமதிக் கிராமமாக பெயரிட்டு அவ்வுற்பத்தியை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அங்கிருந்த தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவ்வாறே தற்போது நாட்டில் செவ்விளநீர் உற்பத்திக்குப் பொருத்தமான வகை இனம் காணப்படவில்லை என்பதுடன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே செவ்விளநீர் உற்பத்தி செய்யப்படுகின்றமை விசேடமாகும். எனினும் அதிக சுவையிலான மற்றும் கவர்ச்சி மிக்கதாக குறுகிய காலத்தினுள் விளைச்சலை ஏற்படுத்தக் கூடிய புதிய செவ்விளநீர் வகையை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாரும் அமைச்சர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

இதுவரை பெருந்தோட்டப் பயிராக செய்கை பண்ணப்படாவிட்டாலும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள செவ்விளநீர்களுக்காக தற்போது சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது.

2022 இல் 11 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 110 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாண்டில் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 140 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி