சீகிரியாவை பார்க்கச் சென்று மீண்டும் தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரின்

பணப்பையை திருடிய சந்தேகநபர்கள் இருவரை சீகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  13 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுவர்களின் உதவி காரணமாக குறித்த சந்தேகநபர்களை விரைவாக கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (26) காலை, சீகிரியாவுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த 22 வயதான துருக்கிய வெளிநாட்டு பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கிவிட்டு, அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதிவேகமாக பயணித்த இந்த மோட்டார் சைக்கிள்களை வீதியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் பார்த்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் தொடர்பில் சந்தேகம் அடைந்த சிறுவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் எண்ணை மனதில் வைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பின்னர், சிறிது நேரத்திற்கு முன், இரண்டு சந்தேக நபர்கள் வெளிநாட்டு யுவதியின் பணப்பையை கொள்ளையடித்துவிட்டு அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று அந்த எண்ணை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர்கள் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின்  சாமர்த்தியமான செயற்பாட்டால் சந்தேகநபர்கள் இலகுவாகவும் விரைவாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு யுவதியின் பணப்பையில் 225 அமெரிக்க டொலர்களும் 20,000 இலங்கை ரூபாவும் இருந்துள்ளன.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி