கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (21) பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.

அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததாக அதில் பயணித்த இரு இளைஞர்கள் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி