மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம்

தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி சந்தேகநபர்கள் ATM இயந்திரத்தில் இருந்த 10 லட்சத்து 54 ஆயிரத்து 490 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய மதுரங்குளிய பொலிஸார் மற்றும் புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி நேற்று (17) காலை அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 9 லட்சத்து 277 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கல்கமுவ, வரெல்லாகம மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 28, 32 மற்றும் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஆடைகள், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்பு கேமராவுக்கு தெளிக்கும் ஸ்பிரே ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மதுரங்குளிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி