காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள்

வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்  நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் வசிக்கும் மக்களுடன் இந்த குழு எகிப்து செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"தற்போது, ​​அங்கு வாழும் மக்கள் குறிப்பாக காசா பகுதியின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவர்களில் 27 இலங்கையர்கள் உள்ளதாக பலஸ்தீன அலுவலகத்தில் உள்ள எமது பலஸ்தீன பிரதிநிதி தெரிவித்துள்ளார். 27 பேரும்  எகிப்துக்கு அடுத்ததாக பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்,    சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருப்பதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரின் விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் இலங்கையர்கள் உட்பட 36 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த விவரங்கள் கிடைத்தால், அந்த இடத்தில் காணாமல் போன எங்கள் இருவரைப் பற்றிய தகவலைப் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன்."

இதேவேளை, இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாடுகளினால் இந்த நாட்டில் ஏற்படக்கூடிய பொருளாதார பிரச்சினைகளை அரசாங்கம் முகாமைத்துவம் செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த யுத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி