2022/23ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (05) முடிவடைவதாக

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் மூன்று வாரங்களுக்கு ஒன்லைன் முறை மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதன்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்றைய தினத்தின் பின்னர் நீடிக்கப்படாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர  உயர்தரப் பரீட்சை முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி வெளியிடப்பட்டன.

263,933 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர், அவர்களில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி