நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து பொது மக்கள் பல்வேறு விதமான நெருக்கடியினை சந்தித்து வரும்

நிலையில் அடிக்கடி எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதனால் மக்களின் வாழ்க்கை சுமையும் மன வேதனையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும் இதனால் தங்களுடை தொழில் செய்ய முடியாது பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று (01) இரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 4 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 3 ரூபாவாலும் வெள்ளை டீசல் விலை 10 ரூபாவாலும் சூப்பர் டீசல் விலை 62 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருட்களின் விலைகள் கடந்த மாதம் அதிகரிக்கப்பட்டதனை தொடந்து பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

குறிப்பாக பொது போக்குவரத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கு திணறி வரும் நிலையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனால் மீண்டும் பொது போக்குவரத்து எரிவாறு மின்சாரம் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட போகின்றன.

இந்த நிலையில் எவ்வித சம்பளமும் அதிகரிக்கப்படாத நிலையில் மக்கள் வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டு மேலும் மேலும் மக்கள் மன அழுத்தத்திற்கும் மன உலைச்சலுக்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது பாரிய அளவில் வெறுப்பு ஏற்படுவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே நேரம் முச்சக்கர சாரதிகள் மற்றும் வாகன சாரதிகள் விலையேற்றம் காரணமாக தங்களது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்த அரசாங்கம் கவனமெடுத்து எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்ச்சியாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலைகள் காரணமாக நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு இதனால் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிகப்படுவதனால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கத்தான் போகின்றன இதனால் சாதாரண மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் என்ற வகையில் பொது மக்கள் மீது கரிசனையுடன் செயப்பட வேண்டும் என பலரும் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி