மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த 15 வயது சிறுமி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (15)

முதல் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மகளூர்  முதலாம் பிரிவு நீலகிரி வீதியைச் சேர்ந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பெற்றோர் கஸ்டப்படுவதாகவும், அதனால் தங்களை பார்க முடியாத நிலையில் இருப்பதாகவும்  என்னை பார்கக் கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்வதாகவும் கடிதம் ஒன்றை சம்பவதினமான நேற்று எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  செய்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை மேசன் தொழில் செய்துவருவதாகவும், மூத்த சகோதரன் திருமணம் முடித்து சென்றுள்ளதாகவும், சிறுமியும் அவருடன் சகோதரன் ஒருவர் உட்பட இருவர் பெற்றோருடன் வாழ்ந்து வருவதாகவும், பெற்றோர் கஸ்டப்பட்டு வருவதாகவும் தந்தையாரின் தாயாரான அப்பம்மா மற்றும் உறவினர்கள்  மாத்தளையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக சிறுமி அப்பம்மாவுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது

காணாமல் போன சிறுமி தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி