ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய கொள்கையை வகுப்பதற்கான செயல்முறையின் ஒரு அங்கமாக பல்வேறு துறைகள் பற்றி

ஆழமாக கலந்துரையாடி பின் ஆலோசனைகளை பெறுவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை வர்த்தக சம்மேளனத்தை சந்தித்தது.

கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவினதும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவின் உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலாநிதி ரொஹான் பல்லேவத்த ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையும் துறைசார் பிரதானிகளும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான கொள்கை ரீதியான தேவைகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் துறைசார் பிரதானிகளால், கொள்கை துறையின் ஒருமைப்பாடு மற்றும் நிலைத்தன்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

ஒவ்வொரு துறைசார் பிரதானிகளிடமிருந்தும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவை எதிர்கால கொள்கைகளின் ஒரு பகுதியாக கருதும் படியுமாக அமைய முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வர்த்தக சம்மேளனத்திற்கு விஜயம் செய்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இன்னும் ஆழமான கலந்துரையாடல்களை ஒழுங்கமைக்க எதிர்காலத்தில் துறைசார் பிரதானிகளுடன் மேலும் தொடர்புகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சமத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான வணிகத் துறையின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.

எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள சக்திஅரசாங்கத்தில், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள பல்வேறு பங்குதாரர்களின் தரவுகள் மற்றும் ஆதாரங்களால் இயக்கப்படும் கொள்கை நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படும்.

இலங்கை வர்த்தக சம்மேளனமானது, இலங்கையின் முக்கியமான துறைகளில் ஒன்றாகும் என்பதோடு, இந்த செயற்பாட்டில் சம்மேளனம் வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி பாராட்டுகிறது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி