முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இன்று (06) காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதற்கு

தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. பிரதீபன் நேற்று விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார்.

இதனையடுத்து, மனிதப் புதைகுழி தொடர்பான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவ, சட்டத்தரணி ரனிதா ஞானராஜா, பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அகழ்வுப் பணிகளுக்கு வசதியாக தற்காலிகக் கூடாரங்களும் தற்காலிக மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன், மனிதப் புதைகுழியை பாதுகாப்பதற்காக தற்காலிகக் கொட்டகையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி