இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 தயாரித்துள்ள ஆவணப்பட நிகழ்ச்சி

தொடர்பில் விசேட பாராளுமன்ற குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (04) அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அது குறித்து இன்று (05) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், தேவைப்பட்டால் சர்வதேச விசாரணை குறித்தும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பாராளுமன்ற  விசேட தெரிவுக்குழு நியமனம் தொடர்பில் நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிப்போம். மேலும் சர்வதேச விசாரணை அவசியமானால் அது பற்றியும் கலந்துரையாடினோம். ஜெனிவா  மனித உரிமைகள் சபை கூட்டம் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் செனல் 4  இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து வௌியிடுகிறது. இந்த வீடியோவில் உள்ள விடங்களை நாம் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

“இங்கும் கூறப்படும் திட்டத்தின்படி கோட்டாபய ராஜபக்ஷவை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்படியயென்றால் அது வருந்தத்தக்க விடயமாகும் என்றார்.

இலங்கையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆவணப்பட நிகழ்ச்சியின் ட்ரெய்லரையும் பிரித்தானியாவின் செனல் 4 வௌியிட்டுள்ளது.

அதன் முழு வீடியோ பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஏப்ரல் தாக்குதல் குண்டுதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் த டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானாவின் வௌிப்படுத்தலுக்கு அமைய இது அமைந்துள்ளது.

இன்று வெளியான ட்ரெய்லரின்படி, தொலைதூரப் பண்ணையில் அப்போதைய இராணுவப் புலனாய்வு பிரதானி சுரேஷ் சாலேவுக்கும் தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்தது தாம் என ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைக்குமாறு பிள்ளையான் என்ற இராஜாங்க அமைச்சர் சிவனேஷ்துரை சந்திரகாந்தன் தன்னிடம் கோரியதாக  ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் சைனி மௌலவியை சந்திக்குமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் ஆசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சஹாரானின் சகோதரர் என்பதை பின்னர் தான் கண்டுபிடித்ததாகவும் ஆசாத் மௌலானா கூறினார்.

நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி, அதிகார மாற்றத்தை எளிதாக்க வேண்டும் என்ற வகையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக செனல் 4 வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை சுரேஷ் சலே மறுத்துள்ளார் என்றும் செனல் 4 தெரிவித்துள்ளது.

சஹாரன் உள்ளிட்டோரை சந்தித்ததாக கூறப்படும் காலத்தில் தாம் மலேசியாவில் இருந்ததாகவும், ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தபோது இந்தியாவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி