உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்

நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி முடிவடைந்தது.

அதன்படி, இந்த தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவரால்  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது டுவிட்டர் கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு, தேசிய கடன் சீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்துவதன் மூலம், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை சீர்குலைக்க பல அரசியல் சக்திகள் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி