வாத்துவ தல்பிட்டிய பிரதேசத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் வேன் ஒன்று ரயிலுடன்

மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (30) காலை 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வேனில் இருவர் பயணித்துள்ள நிலையில், விபத்தின் பின்னர் ஒருவர் அதிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும் மற்றையவர் வேனில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் வேன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதன் காரணமாக கரையோரப் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி