யாழ். தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபரே சனிக்கிழமை (26) திடீரென கீழே

விழுந்து உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல் நடைபெற்றது.

இதன்போது கனடாவில் இருந்து வருகை தந்த குறித்த நபர் பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டு இருந்தவேளை திடீரென கீழே விழுந்தார்.

அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம்மரண விசாரணைகளை மேற்கொண்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.



-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி