குருந்தூர் மலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர்

அடையாளம் கண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நாட்டில் ஏற்படக்கூடிய இன மற்றும் மத கலவரங்கள் குறித்து சர்வதேச புலனாய்வு சேவைகள் அரசாங்கத்திற்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.

அரசியல் தூண்டுதலுடன் நாட்டில் சில இடங்களில் இன மற்றும் மத கலவரத்தை ஏற்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதாக உள்ளூர் புலனாய்வு சேவைகள் இனங்காணப்பட்டுள்ளது.

அரசாங்கம், பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இது ‍ தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவில் வசிக்கும் கத்தோலிக்கர் ஒருவர் குருந்தூர் சம்பவத்திற்கு விஷேட கவனம் செலுத்தி அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி