இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ்

விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (21) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ,

“இதுவரை யார் சுட வந்தார்கள் என்பது தெரியவரவில்லை.மேலும் கொல்லப்பட்டவர் எதற்காக இவ்வாறு கொல்லப்பட்டார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த பல குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."

 "இதுவரை சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் மாறலாம். மேலும், 28 பேர் காயமடைந்துள்ளனர்."

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி