ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது

சுட்டுக் கொல்லப்பட்டார்.

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த மே மாதம் கலைக்கப்பட்டது. 

இதற்கு முன்னர், வில்லவிசென்சியோ பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அதனால் அவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ புதன்கிழமை இரவு தலைநகர் குய்ட்டோவில் பேரணியில் ஈடுபட்டு திரும்பிய போது பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இச்சம்பவத்தால், ஈக்வடோர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது. 

59 வயதான பத்திரிக்கையாளர் வில்லவிசென்சியோ எதிருவரும் 20 ஆம் திகதி அன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான எட்டு வேட்பாளர்களில் ஒருவர் ஆவார். 

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி