15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன்  ஒருவரை இன்று  (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள  பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை 18 வயதுடைய இளைஞன் காதலித்து வந்த நிலையில் சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் சேர்த்து வைத்துள்ளனர்.

அதன்படி, குறித்த இருவரும் கணவன் மனைவியாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக  சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் படி, சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைஞனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் மறைந்திருந்த நிலையில்   18 வயது  இளைஞனை பொலிஸார் இன்று  (8) கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

 கைது செய்யப்பட்ட  இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி