லங்கா பிரீமியர் லீக் 2023 இன் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதத்தால் யாரேனும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கோருவதாக

பாடகி உமாரா சிங்கவன்ச தெரிவித்துள்ளார்.

அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் தேசிய கீதத்தை பாடும் போது சில உச்சரிப்புக்களின் விதம் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் எனது அவதானத்திற்கு வந்தது.

தேசிய கீதத்தை திரபுப்படுத்தவோ அல்லது தவறான அர்த்தங்களை வழங்கவோ நான் எப்போதும் நினைத்தில்லை

நான் தாய் நாட்டை நேசிப்பவர், நாட்டின் அபிமானத்தை உயர்த்தும் வகையிலேயே பாடல்களை பாடுவேன்.

எனினும் தேசிய கீதம் பாடிய விதம் தொடர்பில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ளேன்.

எனது பாடலால் யாரேனும் பாதிக்கப்பட்டு மனம் புண்படுத்தப்பட்டிருந்தால் இதயபூர்வமாகவும், நேர்மையாகவும் மன்னிப்பு கோருகிறேன் என்று பாடகி உமாரா சிங்கவன்ச  தமது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி