அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின்

முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை TMVP கட்சியின் தலைவரும், கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஈடுபட்டிருந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் உள்ளுர் ஒப்பந்த நிறுவனம் ஒன்றினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த புதிய கட்டையார் பாலம் 25 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது. இந்த பாலம் அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்து பொதுமக்களின் போக்குவரத்திற்காக பாலத்தை திறந்து வைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி