சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நேற்று (26) இலங்கை ஊடாக பயணித்தார்.

மாலைதீவில் விடுமுறையை கழித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் அவர், தரித்துச் சென்றார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவை விமான பணிப்பெண்கள் அவரை வரவேற்று (Gold Route) ஊடாக அழைத்து வந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஜூலை 14ஆம் திகதி சென்னையிலிருந்து மாலைதீவுக்கு செல்லும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்திருந்தார். குறித்த விமானம் இலங்கை ஊடாக செல்லும் நிலையில், இலங்கை விமான நிலையத்தில் ஒரு சில மணித்தியாலங்கள் தங்க நேரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவர் நேற்று மீண்டும் நாடு திரும்பும் வழியில் மீண்டும் இலங்கை ஊடாக சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி