உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது

அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. 

டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் 

அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரேண்ட் செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். 

அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரேண்ட் செய்யப்படுகிறது. 

இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். 

புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளத்திற்கு செல்கிறது.

twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.


எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யோக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். 

மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது."வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.",

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி