திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித

உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான ப​ரிசீலனையை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மனுக்களை தேசிய மக்கள் சக்தி மற்றும் பெஃப்ரல் அமைப்பு சமர்ப்பித்துள்ளன.

இந்த மனுக்கள் நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

எனினும் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமில் அங்கம் வகிக்கும் பிரியந்த ஜயவர்தன மற்றுமொரு வழக்கு விசாரணையில் பங்குபற்றவுள்ளமையினால் இந்த மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி