வர்த்தக நிலையங்களை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் கொச்சிக்கடை பகுதியில்

வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இதற்கு முன்னர் கொச்சிக்கடை, கந்தானை, நீர்கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் மின்சார உபகரண விற்பனை நிலையங்களுக்குள் புகுந்து சொத்துக்களை கொள்ளையிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து திருடப்பட்ட 17 மடிக்கணினிகள், 07 கையடக்கத் தொலைபேசிகள், 02 டேப் இயந்திரங்கள் மற்றும் இரண்டு DVD இயந்திரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடைய சந்தேகநபர்கள் இன்று (17) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி