டெல்லி பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் நெருக்கமாக இருந்துள்ளார். 

அப்போது,  ரவி சோலங்கி என்ற நபர் அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், காதலி காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். 

அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த போது பின்தொடர்ந்து வந்த ரவி சோலங்கி அவரை தடுத்தி நிறுத்தி தான் ஒரு காவலர் என்று முதலில் கூறியுள்ளார்.  

பின்னர், காதலனுடன் இருக்கும் ஆபாச வீடியோவை ரவி சோலங்கி காண்பித்து மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறியுள்ளார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை அந்த நபர் சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இறுதியில் அந்த மாணவியை ரவி சோலங்கி படியிலேயே வைத்து பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக கதறிய படி காதலனிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. பின்னர், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி