பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும்  பேருந்துகளை தேடும் நடவடிக்கையை விரிவுபடுத்த நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று (11) கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் வரை பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய நான்கு பேருந்துகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

சோதனை நடவடிக்கைகளுக்காக 4 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தை தொடர்ந்து, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்காலிக அனுமதிப்பத்திரத்தில் இயங்கிய அனைத்து பேருந்துகளையும் போக்குவரத்தில் இருந்து அகற்றுவதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி