சட்டவிரோத இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சினைக்கு இந்தியாவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைப்

பெற்றுக்கொடுக்க வலியுறுத்த வேண்டும் என, அரசியல் தலைவர்களிடம் வடக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் போது, இந்திய அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டுமென யாழ் கடற்றொழிலாளர் சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் அந்தோனிப்பிள்ளை ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் துரித தீர்வை வழங்குமாறு வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மீனவ சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.

“இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்ந்து எங்கள் கடற்பரப்பிற்குள் நுழைகின்றன. அவர்கள் எங்கள் மீன்களை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும். வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கடற்றொழில் அமைச்சர் இணைந்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க வேண்டும்."

யாழ். குடாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்க தலைவர் பிரான்சிஸ் குரூஸ், இந்திய மீனவர்களின் இழுவை படகுகளால் இந்நாட்டு மீனவர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலை கருவிகள் சேதமாக்கப்பட்டுள்ளன என்றார்.

''குடும்பத்தினரின் தங்க நகைகளை அடகு வைத்தே இந்த வலைகளை வாங்குகிறோம். இந்திய மீனவர்களின் இழுவை படகுகளால் எமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதுடன் எமது மீன்பிடி சாதனங்களும் அழிக்கப்படுகின்றன. நமது மீனவர்கள் ஏற்கனவே சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் சுமார் 250 முறைப்பாடுகள் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என நெடுந்தீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினால் நிலையான தீர்வை எட்ட முடியும் என மீனவர் சங்க பிரதிநிதிகள் கருதுகின்றனர்.

இந்த பயணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி