கட்சி உறுப்புரிமை நிறுத்தப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 14ஆம் தேதி நடைபெற

உள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நிமல் சிறிப்பால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார, சுரேன் ராகவன், ஷாமர சம்பத் தசநாயக்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகிய 8 பேருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜூலை 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு, கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற உள்ளது.

இதேவேளை, அக்கட்சியின் அனைத்துக் குழு கூட்டம் ஜூலை 15ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

இவ்விரு கூட்டங்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி