தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட பாராளுமன்ற விவாதம் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை மீதான விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு கோரப்பட்டால், அதை இரவு 7.30 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவும் தேசிய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கூடி இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், குழுவின் பெரும்பான்மையினரால் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை மீதான விவாதம் ஆரம்பம் (Live)
