இந்து சமுத்திரத்தின் 23 எல்லை நாடுகளின் அங்கத்துவத்துடன் கூடிய இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் தலைமைத்துவம்

2023 ஒக்ரோபர் மாதத்தில் குறித்த அமைப்பின் சமகால தலைமைத்துவத்தை வகிக்கின்ற பங்களாதேசத்திடமிருந்து இலங்கைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

இவ்வமைப்பின் தலைமைத்துவம் வகிக்கின்ற காலப்பகுதியில் பிராந்திய மற்றும் உறுப்பு நாடுகளின் அபிவிருத்திக்காக பிராந்திய ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

குறித்த பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரிதிநிதிகளுடக் கூடிய தேசிய செயலணியொன்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும், இரண்டு வருட காலப்பகுதிக்கு செயலகமொன்றை நிறுவுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி