நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு உடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு

திரும்பிய வேளை, நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதோடு குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

ஊர்காவற் துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார்

கடற்படையின் விசேட படகின் மூலம் ஊர்காவற்துறை நீதவான் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட பொலிஸ் அணிகள் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நெடுந்தீவுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது

இன்று அதிகாலை நெடுந்தீவில் கடற்கரை முகாமிற்கு அண்மையில் வீட்டில் தங்கி இருந்த ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி