தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்டை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது

தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒன்றரை மாதங்களில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சங்கம் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரைகளை மீண்டும் தொடங்கும் முடிவிற்கு தனது பாராட்டுகளையும் தெரிவிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தயாராக உள்ளதால், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்க பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் தலையிட வேண்டுமென கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மேலும் ஏதேனும் விடயங்களை கலந்துரையாட விரும்பினால், எதிர்காலத்தில் எந்த நாளிலும் கலந்துரையாடுவதற்கு தயார் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி