புலஸ்திகம பிரதேசத்தில் மனைவியொருவர் தனது கணவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.



நேற்று (09) மாலை 119 அவசர அழைப்பு மையத்தின் ஊடாக புலஸ்திபுர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரும் அவரது மனைவியும் நேற்று மதியம் முதல் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்துள்ளனர்.

விசாரணையில் மனைவி கணவனை பின்னால் கத்தியால் குத்தியிருப்பது தெரியவந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபரான மனைவியும் காயமடைந்து புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி