பொல்கஹவெல நீதிமன்றத்திற்கு அருகில், உத்தரவை மீறிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.



ஹெரோயின் போதைப்பொருளை கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.

ஆனால் பொலிஸ் அதிகாரிகளை மீறி காரை ஓட்டிச் சென்றதால், ​​பொலிஸார் காரை நோக்கிச் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் காரின் டயருக்கு சேதம் ஏற்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை சென்ற காரை பொலிஸார் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தி, அதில் இருந்த மூவரை கைது செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த காருக்குள் ஒரு மாத கைக்குழந்தை, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி