முறையாக தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கெமராக்களை பொருத்த ஈரான்

அரசு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரானிய பொலிஸார், தலையை மறைப்பது நாட்டின் சட்டம் எனவும், சட்டத்தை மீறும் எவரும் அல்லது எந்தவொரு குழு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது.

முறையான முக்காடு அணியாததால் கைது செய்யப்பட்ட மாஹ்சா அமினி என்ற இளம் பெண், கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் பொலிஸாரின் காவலில் உயிரிழந்தார்.

அதன் மூலம், காவல்துறைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் தொடங்கி, நாட்டின் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய மக்கள் போராட்டமாக வரலாற்றில் இடம்பிடித்திருந்தது.

தற்போது போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அரசு தலையிட்டு பெண்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி