இரண்டு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக காலி வீதியை அலங்கரிக்கச் சென்ற இளைஞர் ஒருவர்

விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.

50 அடி உயர கொடி கம்பம் இளைஞர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

களுத்துறை வித்தியாலயத்திற்கும் களுத்துறை திஸ்ஸ மத்திய தேசிய பாடசாலைக்கும் இடையில் எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிக்காக களுத்துறை வித்தியாலயத்திற்கு முன்பாக சுமார் 50 அடி உயரத்தில் பாடசாலை கொடியை ஏற்ற முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சத்துர சமன்நாயக்க என்ற முன்னாள் மாணவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் அவரது வலது கால் முழங்காலுக்கு கீழே பலத்த சேதம் அடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காலி வீதிக்கு மற்றும் ரயில் பாதைக்கு தெளிவாகத் தெரியும் வகையில் பாடசாலைக் கொடியை சுமார் 50 அடி உயரத்தில் ஏற்ற முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி