எதிர்க்கட்சிகள் பொதுவாக எதிரிக்கட்சிகளாக செயற்படுகின்ற நிலைமை தான் பொதுவாக காணக்கூடியதாக இருக்கின்றது என

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்களுடைய இந்த நாடு தலைமைத்துவம் இல்லாமல் இக்கட்டான நிலையில் ஆதாள பாதாளம் நோக்கி விழுந்து கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தடுத்து நிறுத்தி அதை முன்னேற்ற பாதையில் கொண்டு போவேன் என்ற உறுத்திப்பாட்டோடு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்திருக்கின்றார்.

குறுகிய காலததில் இருட்டில் உள்ள எங்களிற்கு முகத்தில் வெளிச்சம் தெரிகிறது. அந்த வெளிச்சம் எமக்கு கிட்ட வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தான் இதனை நாங்கள் பார்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் பயங்கரவாத சட்டம் என்பது, ஒரு இனப்பிரச்சினை இருந்தபடியினால் அதனால் ஒரு பகுதி மக்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நாடு தழுவிய ரீதியில் நாட்டு மக்களிற்கான சட்டமாக தான் கொண்டுவரப்படுகின்றது.

இதற்குள் இனவாதமோ, மதவாதமோ இருக்காது ஆனால் இதுவரை முடிவாக இது எடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துக்கூடாகத் தான் அது சட்டமாக்கப்படும்.

பல பேர் பலவிதமாக கதைக்கின்றனர். இந்த சட்டத்தை பார்த்து வாசித்திருக்க முடியாது. விரைவில் வெளியு வரும். பாராளுமன்ற வாத பிரதிவாதங்களிற்கு பின்னரே அது நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி