ஹைசன் நகரில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஊரடங்கினை நடைமுறைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.



இராணுவ வீரர்களிடம் இருந்து 600 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போயுள்ளதுடன் அவற்றை கண்டுபிடிக்கும் வரை ஹைசன் நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தபடுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான விசாரணைக்கு அந்த பகுதியில் உள்ள அனைவரும் ஒத்துழைக்குமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது அங்கு வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ வீரர்களின் பாதுகாப்பு பணி
வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் வடகொரிய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே இராணுவ வீரர்களிடம் இருந்து 600க்கும் அதிகமான துப்பாக்கி குண்டுகள் காணாமல் போய் உள்ளது.

இந்த விவகாரம் நேரடியாக ஜனாதிபதி கிம் பார்வைக்கு சென்றுள்ளதுடன் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்க உத்தரவிட்டுள்ளார்.

பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையிலே துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்கும் வரை ஹைசன் நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தபடுவதாக கிம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி