எரிபொருள் விலைகுறைப்பு காரணமாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி

சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி இன்று (29) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஒரு கிலோ மீற்றருக்கு 20 ரூபாவினால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.

இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 80 ரூபாவாக மாற்றுவதற்கு முச்சக்கரவண்டி சாரதிகள் அறிவுறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி