படுக்கையைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் சிக்கி 7 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஊவாபரணகம, மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த துரதிஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது.

மஸ்பன்ன, வெலேக்கடே வீடு ஒன்றில் வசித்து வந்த ஹர்ஷனி மதுஷிகா என்ற 7 மாத பெண் குழந்தையே வீட்டின் கட்டிலில் இருந்து வீழ்ந்து, மர பாதுகாப்பு பலகையில் சிக்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையறைக்கு அருகில் வந்து பார்த்தபோது, கட்டிலைச் சுற்றியிருந்த மர பாதுகாப்பு பலகையில் குழந்தை மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையை மீட்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவாபரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி