தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுகின்றார் என்பதற்காக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியொருவரை

அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஹர்சனநாணயக்கார குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தேசிய மக்கள் சக்தி, கட்சிக்குள் முன்னாள் இராணுவ வீரர்கள் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது.

இந்த பிரிவில் இணைந்துகொண்டமைக்காக முன்னாள் விமானப்படை அதிகாரி எயர்வைஸ்மார்சல் சம்பத் துயாகொந்தவை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது எம்ஐ24 ஹெலிக்கொப்டர் படையணியின் விமானியாக பணியாற்றியவரே இவ்வாறு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற அதிகாரியொருவருக்கு தனது தனிப்பட்ட விடயங்களை தெரிவு செய்வது அடிப்படை உரிமை.

என்ன காரணத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரி கறுப்புபட்டியலில் இணைக்கப்பட்டார்.அவருக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்ன விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மேலும் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டமை குறித்து முன்னாள் அதிகாரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.”என கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி