அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில்

ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதனால் நாட்டின் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கின்றன.

இதேவேளை, சுகாதார தொழிற்சங்கங்களின் ஒன்றிய உறுப்பினர்கள் நேற்று காலை 6.30 இற்கு ஆரம்பித்த ஒரு நாள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 06.30 உடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி