2019ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது சுமந்திரன் சம்பந்தன்

உள்ளிட்ட தரப்புகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென தெரிவித்திருந்தாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென கோரிய தரப்புக்கள் இன்று தலைவர் காட்டிய சின்னம் வீடு என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் சபா.குகதாஸ் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக்கட்சிய்ன வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தராசு சின்னத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைப்பதற்கு சுமந்திரன் எடுத்த முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக கோடான கோடி விலை கொடுத்த மண்ணில் நின்று கொண்டு தலைவர் காட்டிய சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டுமென கோருவதற்கு என்ன தகுதி உண்டு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதி யுத்தம் நடக்கின்ற போது பாதுகாப்பாக வெளிநாட்டில் இருந்த பின்னர் மீண்டும் யுத்தம் நிறைவடைந்ததும் நாட்டிற்கு வந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் வேட்பாளராக இருந்த சாணக்கியன் தலைவர் காட்டிய சின்னம் என சொல்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழரசு கட்சி இவ்வளவு கீழ் நிலைக்கு சென்றுவிட்டதாக என்ற கேள்வி எழுவதாகவும் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

தராசு சின்னத்தில் வேட்பார்களை அறிமுகப்படுத்தியுள்ள தமிழரசு கட்சி தலைகாட்டிய சின்னம் தராசு என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார். தராசு சின்னம் தலைவர் காட்டிய சின்னம் என சாணக்கியன் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி