இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி

கிடைக்கப்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராதபட்சத்தில் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2020 மார்ச் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.

இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.

குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகிறது.

எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி