கடுமையான மின்னல் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும் எனவும் அனர்த்தங்களை தவிக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கம் காரணமாக நாவல – கொஸ்வத்தை பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மாலை பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் மின்னல் தாக்கம் காரணமாக நபர் ஒருவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அவரின் நிலைமை கவலைக்கிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் கூரைக்கு எஸ்பெஸ்டாஸ் பொருத்தப்பட்டிருமையினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி