எங்கள் அண்ணன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும்

கோழையல்ல என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார்.ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' என உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார்.

பழ.நெடுமாறன் தெரிவித்த இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இலங்கை இராணுவம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சீமான்,

என் தம்பி சின்னவன் பால சந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச்சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல எங்கள் அண்ணன்.

போர் முடிந்து பேரழிவை நாங்கள் சந்தித்த பிறகு, பிரபாகரன் 15 ஆண்டுகள் பத்திரமாக ஓரிடத்தில் பதுங்கி இருப்பார். எதுவுமே பேசாமல் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருவபர் அல்ல எங்கள் அண்ணன். வந்துவிட்டு சொல்வார். அது தான் அவருக்கு பழக்கம் அவரை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

சொல்லுக்கு முன் செயல் என்று எங்களுக்கு கற்பித்த தலைவர் அதனால் தேவையின்றி குழப்பிக்கொண்டிருக்க வேண்டியதல்ல. பிரபாகரன் ஒரு நாள் மக்களுக்கு முன் தோன்றுவார் என்று பழநெடுமாறன் கூறுகிறார்.தோன்றும்போது பேசுவோம். அன்பழகன் சொல்வது போல் எங்கள் தலைவர் பிரபாகரன் ஒரு நாள் நேரில் வந்துவிட்டால் வந்ததில் இருந்து பேசுவோம்' என்றும் பதிலளித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி